இன்று டெல்லி செல்கிறார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 

share on:
Classic

அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி செல்கிறார்.

மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பட்ஜெட் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, மாநில நிதியமைச்சர்களிடம் பட்ஜெட் தொடர்பான கருத்துகள் கேட்கப்படுவது வழக்கம். 

 அந்த வகையில், நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில், அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை டெல்லி செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind