வந்துவிட்டது 'Uber'- ன் கனவு திட்டமான பறக்கும் டாக்ஸி...!

share on:
Classic

வானத்தில் கார்கள் பறந்து செல்லும் காட்சியை, நீங்கள் பார்க்கும் நேரம் வெகு தொலைவில் இல்லை என்று சொன்னால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். இந்தியாவின் முன்னணி வாகன சேவை நிறுவனமாகிய 'ஊபரின்' கூட்டாளி நிறுவனமான 'பெல்' வானில் பறந்து செல்ல கூடிய தனது புதிய காரின் டிசைனை வெளியிட்டுள்ளது.

பறக்கும் டாக்ஸிகள் :

"பூமியில் வாகன நெருக்கடி அதிகரித்து கொண்டிருக்கும் வேளையில் அதற்கு மாற்றாக இந்த புதிய முறை பலனளிக்கும்" என்று பெல் நிறுவனத்தின் CEO 'மிட்ச் சின்டர்' கூறியுள்ளார். "எங்களது இந்த வான் வழி டாக்ஸி திட்டத்தை மற்ற நிறுவனங்கள் வெகுவாக எதிர்பார்த்து வந்த நிலையில் இதை வெற்றிகரமாக முடித்ததற்காக பெருமை கொள்கிறது பெல். எங்கள் டிசைன் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மிக கவனமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்கள் 'பெல் நெக்ஸஸ்' நிறுவனத்தை வேறு உலகத்திற்கே கொண்டு செல்லும் என்று நம்புகிறோம்" என்கிறார்.
 

அடுத்த கட்டதிற்கான தொடக்கம்:

இந்த பறக்கும் டாக்ஸி திட்டத்துக்காக பல நிறுவனங்களுடன் கைகோர்த்திருந்தது ஊபர். சில வருட கடின உழைப்பிற்கு தற்போது அந்த கனவு திட்டத்தை நானவாக்கியுள்ளது 'பெல்'. ஊபர்  நிறுவனம் சென்ற வருடமே பறக்கும் காரின் மாடல் ஒன்றை அறிமுகபடுத்தியிருந்த நிலையில், வெளியாகியிருக்கும் பெல் நிறுவனத்தின் இந்த புதிய டிசைன் "அடுத்த கட்டதிற்கான தொடக்கம்" என்று ஊபர் கூறியுள்ளது.

செங்குத்தாக பார்க்க ஆரம்பிக்கும் கார்கள் :

தனி மனிதர்களின் பயன்பாட்டை  விட, பலர் சேர்ந்து பயணிக்கும் வகையில் தான் இந்த கார்களை பயன்படுத்த திட்டம் தீட்டியுள்ளது அந்நிறுவனம். மேலும் செங்குத்தாகபறக்க ஆரம்பிப்பதின் மூலம் இந்த கார்களுக்கு விமானங்களை போல பெரிய ஓடுதளம் எல்லாம் இதற்கு தேவையில்லை. மிக சிறிய இடத்தை கொண்டே  பல கார்களை இயக்கமுடியும். மின்சார சக்தியின் மூலம் இயங்கும் இந்த கார்கள் பறந்து செல்வதற்காக 6 பெரிய சைஸ் காற்றாடிகளை கொண்டிருக்கும். இதில் 5 பேர் வரை பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது.  

News Counter: 
100
Loading...

aravind