ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் - பள்ளிக்கல்வித்துறை

share on:
Classic

ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் விபரங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 22 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்று, பள்ளிக்கு வராமல் இருந்த ஆசிரியர்களின் விபரங்களை உடனடியாக இ.எம்.ஐ.எஸ் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட  ஆசிரியர் அரசுப்பள்ளி ஆசிரியரா? அல்லது அரசு உதவிபெறும் பள்ளியின் ஆசிரியரா? என்பதை தெளிவாக கூற வேண்டும் என்றும்  கூறியுள்ளார். மேலும், எந்த தேதியில் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டார்? அனைத்து நாட்களும் போராட்டத்தில் கலந்துகொண்டாரா? என்பது உள்ளிட்ட விபரங்களையும் விளக்கமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind