’தேவராட்டம்’ படத்தின் மதுர பளபளக்குது பாடல் வெளியீடு..!!

share on:
Classic

தேவராட்டம் படத்தின் மதுர பளபளக்குது பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் சமீப காலமாக இளைஞர்களுக்கு பிடிக்கும் விதமாக படங்கள் கொடுத்து வருபவர் தான் கெளதம் கார்த்திக். இவரின் நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவான 'தேவராட்டம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

மதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றில் நடக்கும் கதையில் உருவாகியுள்ள இந்த தேவராட்டம் படத்தில் கெளதம் கார்த்திக் சட்டக் கல்லூரி மாணவராகவும், கிராமத்தின் நலனுக்காக பாடுபவராகவும் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மஞ்சிமா மோகன், சூரி, ராஜ்கிரண், கோவை சரளா, கலையரசன், மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் தேவராட்டம் படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

தேவராட்டம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் நிலையில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் உருவான மதுர பளபளக்குது என்ற வீடியோ பாடலை  படக்குழு வெளியிட்டுள்ளது.  

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan