பிரபுதேவாவின் ’தேவி 2’ படத்தின் சென்சார் தகவல் வெளியீடு..!!

share on:
Classic

பிரபுதேவா நடிப்பில் உருவான தேவி 2 படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபுதேவா, தமன்னா நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய படம் தான் 'தேவி'. இந்த படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'தேவி 2' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

பிரபுதேவா, தமன்னா, நந்திதா, கோவை சரளா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ், யோகிபாபு, குருசோமசுந்தரம், நாசர், சோனுசூட் என பலர் நடிக்கும் இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். தேவி 2 படம் தமிழ், இந்தி என 2 மொழிகளில் உருவாகியுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த இயக்குனர் விஜய், ஒருபக்கம் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணியையும் இன்னொரு பக்கம் ஜெயலலிதா வாழ்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' படத்தின் படப்பிடிப்பையும் நடத்தி வந்தார்.

தேவி 2 படத்தின் டீசர் மற்றும் சிங்கள் டிராக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சென்சார் பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது.  தேவி 2 படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இந்த தேவி 2 படம் வரும் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan