திரைத்துறையில் 17 ஆண்டுகளை நிறைவு செய்த தனுஷ்..!! ரசிகர்களுக்கு நன்றி கடிதம்..

share on:
Classic

நடிகர் தனுஷ் திரைத்துறையில் கால்பதித்து 17 ஆண்டுகளில் நிறைவடைந்ததை முன்னிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். 

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், பாலிவுட், ஹாலிவுட் சென்று தடம் பதித்துள்ளார். 2002-ம் ஆண்டு மே மாதம் துள்ளுவதோ இளமை படம் வெளியானது. அவர் திரைக்கு வந்து நேற்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டிவிட்டரில் ரசிகர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தான் ஒரு சரியான நபர் இல்லை என்று தெரிவித்துள்ள தனுஷ், ரசிகர்கள் நிபந்தனையற்ற அன்பு மற்றும் நம்பிக்கையால் தற்போது இந்த நிலையை அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். வெற்றி, தோல்வி அனைத்திலும் தனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

வெற்றி மாறனின் அசுரன், இயக்குனர் துரை செந்தில் குமாரின் அடுத்த படம் ஆகியவை தனுஷ் கைவசம் உள்ளன. இவை தவிர தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான, தி எக்ஸ்ட்ராடினரி தி ஃபாகிர் 'The Extraordinary Journey of The Fakir' இந்தியாவில் வெளிவர உள்ளது.

News Counter: 
100
Loading...

Ramya