'அசுரன்' படத்திற்கு தனுஷின் 'மிரட்டல்' லுக்..

share on:
Classic

இயக்குனர் வெற்றிமாறன் இயக்க நடிகர் தனுஷ் நடிக்கும் 'அசுரன்' படத்தின் புதிய லுக்கை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் தனுஷ்.

தொடரும் வெற்றி கூட்டணி :

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்த படத்தின் மூலம் நடிகர் தனுஷுக்கு பல ஆயிர கணக்கான புதிய ரசிகர்கள் கிடைத்தனர். இந்த படத்திலும் சரி இதற்கு முன்பு வந்த ஆடுகளம்,பொல்லாதவன் போன்ற படங்களிலும் இவர்களது காம்போ மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. 
 

 

முழுநீள கமர்சியல் படம் :

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்க தனுஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கான படத்தில் தனுஷின் கெட்டெப் வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்திற்கு 'அசுரன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. முழு நீள கமர்சியல் படமாக உருவாகும் இதில் தனுஷின் லுக்கே வேற லெவலில் உள்ளது .'பவர் பாண்டி'க்கு பிறகு நடிகர் நாகர்ஜூனாவை வைத்து தனது இரண்டாவது படத்தை இயக்க இருந்த தனுஷ் ’அசுரன்’ படத்திற்காக அதை தள்ளிப்போட்டுள்ளார். 

கரடு முரடு தனுஷ் :
 

தனது டுவிட்டர் தளத்தில் 'அசுரன்' படத்தில் தனது கெட்டப் என்று இந்த போட்டோவை நடிகர் தனுஷ் பதிவேற்றி இருக்கிறார். அசுரன் படத்திற்காக தனுஷ் புதிய ஹேர் ஸ்டைலோடு, கரடு முரடான ஆளாக காட்சி அளிக்கிறார். வட சென்னை படத்திற்கு பின் இந்த படத்துக்கு ரசிகர் மத்தியில் ஆவல் பல மடங்கு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா" படம், தயாரிப்பு பிரச்சனைகளால் வெளிவராமல் தாமதம் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

aravind