மீண்டும் டபுல் ஆக்‌ஷனில் தனுஷ்!

Classic

வெற்றிமாரன் இயக்கும் ‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட சென்னை திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ்-வெற்றிமாரன் கூட்டணியில் உருவாகிவரும் படம் அசுரன். இப்படத்தை கலைப்புலி எஸ்.தானு தயாரிக்கிறார். வெப்பம் எனும் நாவல் கதையைத் தழுவி எடுக்கப்படும் இப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் கருனாஸ், இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

துரை செந்தில்குமார் இயக்கிய ‘கொடி’ படத்திற்கு பிறகு அசுரன் திரைப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில், தனுஷ் தற்போது மற்றொரு புதிய திரைப்படத்தை இயக்கி நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

youtube