குற்றாலத்தில் துவங்கிய தனுஷின் புதிய படம்..!!

share on:
Classic

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் துவங்கியது. 

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாக பல வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'விஸ்வாசம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது, தனுஷ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறது.

‘தொடரி’ படத்துக்கு பிறகு சத்யஜோதி ஃபிலிம்ஸ் பட நிறுவனமும், நடிகர் தனுஷும் இணைந்திருக்கும் இந்தப் படத்தில் நடிகை சினேகா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ‘புதுப்பேட்டை’ படத்தையடுத்து 13 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷுடன் இணைகிறார் நடிகை சினேகா. 

தனுஷ் நடித்த ‘கொடி’ படத்தை இயக்கிய துரை. செந்தில்குமார் இயக்குகிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, இசை இரட்டையர்களான விவேக் - மெர்வின் இசையமைக்கிறார்கள். இன்னும் டைட்டில் முடிவாகாத இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு குற்றாலத்தில் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து 30 நாட்கள் அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்படுகிறது. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan