’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பில் எடுத்த வீடியோ காட்சிகள் லீக்..!!

share on:
Classic

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பில் எடுத்த வீடியோ  மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை வைத்துருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  சமீபத்தில் இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த ‘பேட்ட’ படம்   பழைய சூப்பர்ஸ்டாரை நமக்கு நினைவுப்படுத்தியுள்ளது. ரஜினி பேட்ட படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கின்றார். தர்பார் என டைட்டில் வைத்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகை நயன்தாராவும் இணைந்திருந்த நிலையில் படப்பிடிப்பில் எடுத்த ஒரு வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் இது போன்ற வீடியோக்களை பகிர வேண்டாம் என்று ரஜினி ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan