’தர்மபிரபு’ படத்தின் இசை வெளியீடு..!!

share on:
Classic

தர்மபிரபு படத்தின் இசை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விமல், வரலட்சுமி நடித்துள்ள ’கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துகுமரன் அடுத்து இயக்கி வரும் படம் ’தர்மபிரபு'. இந்த படத்தில் யோகி பாபு, ’வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர்.

முழு நீள நகைச்சுவை படமாக உருவாகும் இந்த தர்மபிரபு படத்தில் யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும் ரமேஷ் திலக் சித்திரகுப்தனாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தர்மபிரபு படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் இசை இப்போது வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan