உலகக்கோப்பை : தவான் இடத்தை நிரப்பப்போவது யார்..?

share on:
Classic

தவான் உலகக்கோப்பையில் இருந்து விலகிய நிலையில், அணியில் அடுத்து யாரை சேர்ப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

நடந்து வரும் உலகக்கோப்பை தொடர் லீக் போட்டிகளில் மே 9-ஆம் தேதி நடைபெற்ற ஆடட்த்தில் இந்திய, அஸ்திரேலிய அணிகள் மோதின. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டத்தில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்றது. அன்றைய ஆட்டத்தில் தவான் 117 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். பேட்டிங் செய்யும் போது தவானுக்கு விரலில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இவரை பரிசோதித்த இந்திய அணி ஃபிஸியோக்கள், தவான் கட்டாயமாக 3 வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இந்நிலையில், அவர் உலகக்கோப்பையிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து அணியில் தவானுக்கு பதில் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என சமூக வளைதலங்களில் பேச்சு எழுந்துள்ளது. ரஹானே அல்லது ரிஷாப் பந்த்க்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Saravanan