உலகக்கோப்பை தொடரிலிருந்து தவான் விலகல்...!

share on:
Classic

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து ஷிகார் தவான் விலகியுள்ளார். 

உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக அண்மையில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சதமடித்து அசத்திய தவான் இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தார். இந்த போட்டியில் பேட்டிங் செய்த போது தவானுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர் ஃபீல்டிங் செய்வதிலிருந்து விலகி டிரெஸ்ஸிங் அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். போட்டியின் பிறகு இவரை பரிசோதித்த இந்திய அணி ஃபிஸியோக்கள் தவான் கட்டாயமாக 3 வாரங்களுக்கு விளையாடக்கூடாது என அறிவுறுத்தினர். இந்நிலையில், 3 வார கட்டாய ஓய்வு காரணமாக தவான் இந்திய உலகக்கோப்பை அணியிலிருந்து விலகியுள்ளார். தவானுக்கு பதிலாக ரிஷப் பண்ட் அல்லது ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

News Counter: 
100
Loading...

mayakumar