தவானுக்கு பதில் மாற்று வீரரை தேர்வு செய்யவில்லை..! கோலியின் பதில்...!

share on:
Classic

தவானுக்கு பதில் மாற்று வீரர் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதற்கான பதிலை கோலி செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.

12-வது உலகக்கோப்பை லீக் ஆட்டமானது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது, அன்றைய ஆட்டத்தில் தவான் 117 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுனையாக இருந்தார். மேலும் அன்றைய ஆட்டத்தில் மேன் ஆப் த மேட்ச் அவார்டையும் தட்டி சென்றார்.

அந்த ஆட்டத்தில் அவருக்கு ஏற்ப்பட்ட காயத்தால் அவரை மருத்துவர்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறித்தனர். இந்நிலையில், அவர் உலகக்கோப்பையில் இருந்து விலகுவதாக செய்திகள் பரவியது. அதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்தது, மேலும் அணியில் தவானே தொடர்வார் என்றும் மாற்று வீரர்கள் யாரையும் தேர்வு செய்ய போவதில்லை எனவும் தெரிவித்தது.
இதுகுறித்து கோலி கூறியதாவது “தவான் இன்னும் விளையாட்டை தொடர விரும்புகிறார், அவரின் இந்த எண்ணம் அவரை சீக்கிரம் காயத்தில் இருந்து குணமடைய செய்யும், அவர் காயத்தில் இருந்து மீண்டு அரை இறுதியில் பங்கேற்பார் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Saravanan