புதிய உலக சாதனை படைத்த கூல் கேப்டன் தோனி..!

share on:
Classic

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கியதன் மூலம் புதிய உலக சாதனை படைத்துள்ளார் நம்ம தல தோனி.

12-வது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய அரையிறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.  டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகின்றனர். இந்நிலையில், இந்த போட்டியில் தோனி களமிறங்கியதன் மூலம் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் ஆடியதன் மூலம் 350 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்ற 10-வது வீரர் என்ற பெருமை பெற்றார். 
 
சச்சினுக்கு பிறகு 350 ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார். மேலும் 350 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்ற முதல் விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனை படைத்துள்ளார். அவர் விளையாடிய 350 ஒருநாள் போட்டிகளில் 200 போட்டியில் கேப்டனாக அணியை வழி நடத்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் தோனி படைத்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Saravanan