சச்சின் மீது கடுப்பான தோனி ரசிகர்கள்..!

share on:
Classic

உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சச்சின் அவரின் ஆட்டத்தின் தன்மை குறித்து  விமர்சித்திருந்தார். இதனால் சச்சின் குறித்து தோனி ரசிகர்கள் விமர்சனங்கள் வைத்து வருகின்றனர். 

உலகக்கோப்பை தொடரானது இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா ஆப்கானிஸ்தான் இடையேயான உலகக்கோப்பையில் லீக் போட்டியில் விராட் கோலியும், கேதார் ஜாதவ் மட்டுமே அரைசதம் கடந்தனர். மற்ற வீரர்களின் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. பெரிய ஸ்கோர் எதிர்பார்த்த ஆட்டத்தில் 224 ரன்களுக்குள் இந்திய அணி தனது ஆட்டத்தை முடித்து கொண்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அன்றைய ஆட்டத்தில் இந்திய அணி  11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி. 

அந்த ஆட்டத்தில் தோனியின் பேட்டிங் ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. அந்நிலையில் சச்சின், மூத்த வீரர் தோனியின் பேட்டிங் எதிர்பார்த்தது போல இல்லை, மிகவும் மந்தமாகவே இருந்தது எனவும், மேலும் சுழற்பந்து வீச்சுல் 34 ஓவர்கள் பேட் செய்து 119 ரன்கள் தான் இந்திய அணி சேர்த்திருந்தது, இது சாதாரண விஷயம் இல்லை என கூறியிருந்தார். இதனால் தோனியின் ரசிகர்கள் சச்சின் மீது பல விமர்சனங்கள் வைத்து வருகின்றனர். 

தோனியின் ரசிகர் ஒருவர் சச்சின் குறித்து விமர்சிக்கையில், " சச்சின் 95 ரன்கள் முதல் 100 ரன்கள் எடுப்பதற்கு 20 பந்துகளை வீணாக்குவார். இதனால் அவர் 100 ரன்களை சேர்த்த மேட்சுகளில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது என கூறியிருந்தார்.

மற்றொரு ரசிகர், " தோனியின் நிதானமான ஆட்டத்தை பலரும் குறை கூறுகின்றனர். இப்போது சச்சின் வெளிப்படையாக வந்து விமர்சிக்கிறார். இந்திய அணிக்காக, தோனி பல போட்டிகளில் வெற்றி பெற்றுக்கொடுத்துள்ளார் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

Saravanan