உலகக்கோப்பை : தோனி அடித்த சிக்ஸ் வியப்பில் ஆழ்ந்த கோலி..!

share on:
Classic

உலகக்கோப்பை : கோலியை வியப்பில் ஆழ்த்திய தோனியின் சிக்ஸ்..

உலகக்கோப்பை லீக் போட்டி இன்று ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர்.
இதில் ரோஹித் ஷர்மா 57 ரன்கள் எடுத்திருந்த போது  கூல்டர் நைல் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய கோலியுடன் சேர்ந்து தவான் தனது சதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் வந்த பாண்டியா அதிரடியாக 48 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பின் களமிறங்கிய தோனி, 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்ப்பட 27 ரன்னில் வெளியேறினார், தோனி அடித்த சிக்ஸை பார்த்து கோலி வியப்பில் ஆழ்ந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தலங்களில் அதிகமாக பகிர்ந்துவருகின்றனர். 

News Counter: 
100
Loading...

Saravanan