இணையத்தில் வைரல்..... தோனியின் செயலை கொண்டாடும் ரசிகர்கள்.... அப்படி என்ன செய்தார் தோனி..!

share on:
Classic

தோனியின் மொபைல் கவரில் பாலிதான் முத்திரை பதிக்கப்பட்ட போட்டோக்கள் இணையத்தில் வைரல்..

தோனி இந்திய ராணிவத்தில் பாராசூட் படையில் லெப்டினண்ட் கர்னலாக 2011 முதல் உள்ளார், அதற்காக நிறைய பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டார். அதன் காரணமாக பாராமிலிட்டரி பிரிவின் பாலிதான் முத்திரை அவருக்கு வழங்கப்பட்டது, 
நடந்து வரும் உலகக்கோப்பையில் இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் மே 9-ஆம் தேதி மோதின. அந்த ஆட்டத்தில் தோனி அணிந்திருந்த கையுறையில் இந்திய ராணுவத்தின் பாராமிலிட்டரி பிரிவின் பாலிதான் முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல கருத்துகள் எழுந்த நிலையில் ஐசிசி அந்த கையுரை அணிய தோனிக்கு தடை விதித்தது. அதை ஏற்றுக்கொண்ட தோனி ஆஸ்திரேலியாவுடன் நடந்த ஆட்டத்தில் கையுறையில் இருந்த பாலிதான் முத்திரையை  நீக்கினார். 

தற்போது தோனி பாலிதான் முத்திரை பொறிக்கப்பட்ட மொபைல் கவர் பயன்படுத்துவது போன்ற புகைப்படம் இணையம் முழுவதும் வைரலாக வலம் வந்து கொண்டுள்ளது..   

News Counter: 
100
Loading...

Saravanan