பேட்ஸ்மேன் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறிய தோனி...!!

share on:
Classic

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளிலும், தொடர்ந்து அரை சதம் அடித்ததின் மூலம் ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி 17வது இடத்தில் உள்ளார் தோனி.

கடந்த ஆண்டிலிருந்தே சரியான பார்மில் இல்லாத தோனி, ஆஸ்திரேலியாவில் நடந்த மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இறங்கி அடித்தார். 51, 55 மற்றும் 87(நாட் அவுட்) என அடித்து துவம்சம் செய்த தோனியின் ஆட்டம்,அந்த தொடரில் இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்த அபார ஆட்டத்தின் மூலம் ஐசிசி தரவரிசையில் 3 இடங்கள் முன்னே சென்றுள்ளார் தோனி. கடந்த வருடம் முழுவதும் நடந்த 20 போட்டிகளில், மொத்தமாகவே தோனி ஸ்கோர் செய்தது வெறும் 275 ரன்கள் தான். ஆனால்  இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே துடிப்பாக விளையாடி வருவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில் தொடர்ந்து இந்திய பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. 887 புள்ளிகளுடன் இந்திய அணி கேப்டன் 'கோலி' முதல் இடத்திலும், 854 புள்ளிகள் பெற்று 'ரோஹித் சர்மா' இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மேலும் இந்திய அணி வீரர் ஷிகர் தவான் 744 புள்ளிகளுடன் 10 வது இடத்தில் உள்ளார். தற்போது தோனியும் முன்னேறியுள்ளதால், முதல் 20 இடங்களில் இந்திய அணி வீரர்களே 4 பேர் இருப்பது இந்திய அணிக்கு பெருமை சேர்த்துள்ளது.

News Counter: 
100
Loading...

youtube