WC19 : தோனி கையுறையில் இருந்த பாராமிலிட்டரி சின்னத்தை நீக்கினார்..

share on:
Classic

12-வது உலகக்கோப்பை போட்டி கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது லீக் ஆட்டத்தில் இந்தியா,தென்னாப்பிரிக்க அணிகள் மோதின, இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அணியின் விக்கெட் கீப்பருமான தோனி அணிந்திருந்த கையுறையில் இந்திய ராணுவத்தின் பாராமிலிட்டரி பிரிவின் பாலிதான் முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தோனி அணிந்திருந்த கையுறையில் பொறிக்கப்பட்டிறிந்த சின்னத்தை அகற்றுமாறு ஐசிசி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில் பலரும் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் வாரியம் தோனிக்கு ஆதரவாக் தனது கருத்தை தெரிவித்தது. ஐசிசி அதை நிராகரித்த காரணத்தால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் இன்றைய போட்டியில் தோனி தனது கையுறையில் பாலிதான் முத்திரை சின்னத்தை நிக்கியுள்ளார், 

News Counter: 
100
Loading...

Saravanan