தோனி ரன் அவுட்டால் அதிர்ச்சியடைந்த அம்பயர்..!

share on:
Classic

தோனி ரன் அவுட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்த அம்பயரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது...

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி நேற்று மான்செஸ்டரில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 239 ரன்கள் சேர்த்து தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் - ரோஹித் தலா ஒரு ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளிக்க அவரை தொடர்ந்து வந்த கோலியும் ஒரு ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 25 பந்துகளுக்கு 6 ரன்கள் மட்டுமே சேர்த்து வெளியேறினார். 
அடுத்து களமிறங்கிய பாண்டியா-பண்ட் தலா 32 ரன்கள் சேர்த்து வெளியேறினர். 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தோனி-ஜடேஜா நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதில் நம்பிக்கையூட்டும் விதமாக அதிரடியாக ஆடிய ஜடேஜா 4 சிக்ஸ்ர் 4 பவுண்டரி உட்பட 59 பந்துகளுக்கு 77 ரன்கள் குவித்து வெளியேறினார்.
இவரது விக்கெட் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட தோனி எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது தோனியின் ரன் அவுட்டைப் பார்த்து அம்பயர் அதிர்ச்சி அடைந்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

News Counter: 
100
Loading...

Saravanan