சர்க்கரை நோயினால் கால்கள் பாதிக்கப்பட்டுள்ளதா..?? உங்களுக்கான டிப்ஸ்..!!

share on:
Classic

40 வயதைத் தாண்டிய பெரும்பாலானோர் இந்த சர்க்கரை நோயினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

சர்க்கரை நோய் வருவதற்கு அதிக உடல் எடை, பரம்பரையாக இந்நோய் இருப்பது, அதிக ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, உடற்பயிற்சி இல்லாமை, ஊட்டச்சத்து இல்லாத உணவு, மன அழுத்தம் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது போன்றவைகளால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இந்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் கால்கள் பாதிப்படைந்து நடக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

பாதங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க சில வழிமுறைகளை காண்போம் :

  • தினமும் கால்களை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
  • எப்போதும் காலில் செருப்பு அணிந்து நடக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட செருப்புகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பயன்படுத்துவதால் பாதங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும்.
  • இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • சிறிய காயம் புண் ஏற்பட்டாலும் மருத்துவரை நாட வேண்டும்.
  • மழை காலங்களில் சேறு போன்றவைகளில் கால் வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய் வராமல் தடுக்க :

  • சர்க்கரை நோய் வராமல் தடுக்க சில ஆரோக்கியமான உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும். மேலும் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை தவறாமல் செய்ய வேண்டும்.
  • மேலும் கசப்பான உணவுகளை சாப்பிடுவதால் உடலில் இன்சுலின் சுரப்பை அதிகமாக்கி சர்க்கரை நோயை குறைக்கும்.
News Counter: 
100
Loading...

Thaamarai Kannan