நடிகர் பார்த்திபனால் உதவி இயக்குநர் ஜெயங்கொண்டான் உயிருக்கு ஆபத்தா..?

share on:
Classic

உதவி இயக்குநர் ஜெயங்கொண்டான் தனது உயிருக்கு நடிகர் பார்த்திபனால் ஆபத்து உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

உதவி இயக்குநர் ஜெயங்கோண்டான் நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கியதாக மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தான் 10 ஆண்டுகளாக பார்த்திபனுடன் நட்புடன் பழகி வந்ததாக தெரிவித்துள்ளார். அண்மையில் பார்த்திபன் வேலையை விட்டு நீக்கிய ஒருவரிடம் தான் பேசியதற்காக பார்திபனும் அவரது உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு திரையரங்கின் மாடியில் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், ஜெயங்கொண்டான் உயிருக்கு பார்த்திபனால் ஆபத்து இருப்பதால் காவல்துறை தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan