நடிகர் அக்ஷய் குமார் வாக்களித்த புகைப்படம் எங்கே..?

share on:
Classic

நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் அக்‌ஷய் குமார் வாக்களிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் 6 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த திங்கட்கிழமை தேர்தல் நடைபெற்றது. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஓட்டுரிமையின் மகத்துவம் குறித்து வாக்காளர்களிடம் நடிகர் அக்‌ஷய் குமார் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், பாலிவுட் நடிகர்கள் பலரும் வாக்களித்தநிலையில் நடிகர் அக்ஷய் குமார் தனது வாக்கினை பதிவு செய்யவில்லை. இது குறித்து நிரூபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் எதுவும் அளிக்காமல் அவர் வேக வேகமாக சென்று விட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

News Counter: 
100
Loading...

Ragavan