"இனப்படுகொலைக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை"

share on:
Classic

ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலையை சர்வதேச சமூகம் வேடிக்கை மட்டுமே பர்த்ததாக நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளின் 10ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்றது. அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சொந்த நாட்டு மக்கள் மீது விதிகளை மீறி தாக்குதல் நடத்தி இனப்படுகொலை செய்யப்பட்டதாக கூறினார். 

இதை சர்வதேச சமூகம் வேடிக்கை மட்டுமே பார்த்ததாக சாடிய அவர், இந்த இன அழிப்புக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என்றும், அதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind