'சூப்பர் ஸ்டார்' மாரடோனாவுக்கு என்ன ஆச்சு?...ரசிகர்கள் சோகம்...

share on:
Classic

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் வீரர் மாரடோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 

கால்பந்து விளையாட்டில் பெரிய 'ஸ்டாராக' விளங்கும் டியகோ மாரடோனா (58) பல ஆண்டுகளாக அர்ஜென்டினா அணிக்காக விளையாடி பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார். ஓய்வுபெற்ற அவர், தற்போது மெக்ஸிகோ அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவர் 1986-ல் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டினா அணிக்கு தலைமை தாங்கி, கோப்பையை பெற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாதியோ வியாதி :

1997-ல் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து வெளியேறியதிலிருந்தே அவருக்கு பல உடல் உபாதைகள் இருந்து வந்தது. போதை மருந்து பழக்கத்தால் கடந்த 2000-ம் வருடம் மாரடோனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து குடி பழக்கத்திலிருந்து வெளியே வர மருத்துவர்களின் உதவியை நாடியவர், அதிலிருந்து தொடர்ந்து மருத்துவ சோதனைகள் செய்து வருகிறார். இந்நிலையில் தான் வயிற்று பகுதியில் உள் ரத்தப்போக்கு காரணமாக அவர் திரும்பவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒருவழியாக வீடு திரும்பினார் மாரடோனா:

இந்த செய்தி அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் மருத்துவ சோதனைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார் மாரடோனா. இதனை உறுதி செய்த அவரது மகள் "என் தந்தையின் நலத்தை பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு சொல்கிறேன்...என் தந்தை நலமுடன் தான் இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind