ஜிவி பிரகாஷ்-ரைசா படத்தின் வித்தியாசமான டைட்டில்..!!

share on:
Classic

ஒரு ஆண்டில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் ஜிவி பிரகாஷ்.  

இவர் நடித்த படங்கள் இந்த வருடம் அடுத்தடுத்து வெளிவரவுள்ள நிலையில் அவர் நடிக்கவிருக்கும் இன்னொரு படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் கமல்பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், பிக்பாஸ் புகழ் ரைசா இணையும் இந்த படத்திற்கு 'காதலிக்க யாருமில்லை' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1964ஆம் ஆண்டு ரவிச்சந்திரன், முத்துராமன் நடித்த 'காதலிக்க நேரமில்லை' படம் போல் இந்த படமும் ஒரு காமெடி கலந்த ரொமான்ஸ் படம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளது. காவ்யா மகேஷ் தயாரிக்கும் காதலிக்க யாருமில்லை படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய சிவாநந்தேஷ்வரன் படத்தொகுப்பு பணியை கவனிக்கிறார். இந்த படத்தில் குருசோமசுந்தரம், யோகிபாபு  முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan