டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை : பிரதான வங்கிகளை பின்னுக்கு தள்ளிய Paytm Payments Bank..

share on:
Classic

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் நாட்டின் பிரதான வங்கிகளை விட Paytm Payments Banks அதிகளவு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பேடிஎம் பேமெண்டஸ் வங்கிகளுக்கு ( Paytm Payments Banks ) 2019 - 2020 நிதியாண்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு ரூ. 501.16 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான வங்கிகளான ஹெச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ, பஞ்சாப் நேஷனல், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஆக்சிஸ் பேங்க் ஆகிய வங்கிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிக ரூபாயை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பேடிஎம் வங்கிகளுக்கு நிர்ணயித்துள்ளது. இதே போல் மேற்கூறிய 5 வங்கிகளுக்கு மட்டுமே ரூ.100 கோடிக்கும் அதிகமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

2018 - 2019 நிதியாண்டில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பேடிஎம் ரூ.354 கோடிக்கும் அதிகமான இலக்கை எட்டி, இந்தியாவின் ஒட்டுமொத்த வங்கித்துறையிலும் 2-வது பெரிய நிறுவனம் என்ற இடத்தை எட்டியது. மேலும் மொபைல் பேங்கிங் மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஏற்கனவே முன்னணியில் உள்ள பேடிஎம் நிறுவனம், தங்கள் வங்கிக்கணக்கில் சேமிப்பு வைப்பு தொகையில் ரூ. 500 கோடிக்கு அதிகமான பணத்தை கொண்டுள்ளதால் நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் வங்கியாக உள்ளது. மேலும் இந்த சேமிப்பு தொகையை அதிகரிக்க பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தவும் பேடிஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 
 

News Counter: 
100
Loading...

Ramya