மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன்!!!

share on:
Classic

தமிழக பட்ஜெட்டில் இந்த ஆண்டு பள்ளிக்கல்வித் துறைக்கு சுமார் 28 ஆயிரத்து 757 கோடி ரூபாய்  நிதி ஒதுக்கியுள்ள நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 28 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளதாகக் கூறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் கே.ஆர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.  இந்த விழாவில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறைக்காக 28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று பேசினார். ஆனால், தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறைக்கு 28 ஆயிரத்து 757 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், அமைச்சர் நிதியைக் குறைத்து தவறாக பேசியது, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

 

News Counter: 
100
Loading...

aravind