தினேஷ் கார்த்திக் பிடித்த 'ஆஸம் கேட்ச்'...! ஆப்ரேஷன் சக்ஸஸ், பேஷண்ட் டெட்

share on:
Classic

வெலிங்டன் டி20 கிரிக்கெட் போட்டியில் தினேஷ் கார்த்திக் பிடித்த கேட்ச் ஒன்று சமூக வலைதளங்களை டிரெண்டிங்காக ஆக்கிரமித்துள்ளது. 

நியூஸிலாந்து அணிக்கெதிராக இன்று நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும், தமிழக நம்பிக்கை நட்சத்திரம் தினேஷ் கார்த்திக் பிடித்த கேட்ச் ஒன்று சமூக வலைதளங்களில் இப்போது வைரலாக பரவி வருகிறது. இன்றைய போட்டியின் 15-வது ஓவரில் நியூஸிலாந்து பேட்ஸ்மேன் டரைல் மிட்சல் அடித்த பந்து சிக்ஸரை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது பவுண்டரிக்கு அருகே ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த தினேஷ் கார்த்திக் சமயோஜிதமாக செயல்பட்டு அபாரமாக கேட்ச் பிடித்தார். ஒரு கட்டத்தில் சிக்ஸர் உறுதியான நிலையில் இருந்த போது கார்த்திக் லாவகமாக பந்தை தட்டிப்பிடித்து இந்திய ரசிகர்களை மெய்சிலிர்ப்பில் ஆழ்த்தினார். 

What A Catch!. DK (Dinesh Karthik) @DineshKarthik #NZvIND pic.twitter.com/WwfKHPVptr

— Shankar (@shanmsd) February 6, 2019

News Counter: 
100
Loading...

mayakumar