தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்பசாமி சுற்றறிக்கை..!

share on:
Classic

அனைத்து தொடக்க, நடுநிலைப பள்ளிகளுக்கும் தொடக்கக்கல்வி இயக்குநர் கருப்பசாமி 6 விதிமுறைகள் கொண்ட சுற்றறிக்கையை அனுப்பியுள்ளனர்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விழிப்புணர்வு பேரணிகளில் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி பங்கு பெற செய்யக்கூடாது என்றும், அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கும் பணிகளை கோடை விடுமுறையிலேயே முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை சார்ந்த தகவல்களை பொதுமக்கள் அறியும் வண்ணம் துண்டுப் பிரசுரங்கள், பதாகைகள், பலகைகள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சார்ந்த விவர அறிக்கையை தொடக்கக்கல்வி இயக்குநரகத்துக்கு உடனே அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan