முன் ஜாமீன் கோரி இயக்குனர் பா.ரஞ்சித் மனுதாக்கல்..!

share on:
Classic

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில்,  இயக்குநர் பா.ரஞ்சித் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்  பா.ரஞ்சித்  மனு தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், வரலாற்று தகவலின் அடிப்படையிலேயே தான் பேசியதாகவும், தனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல எனவும் அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind