தமிழக பட்ஜெட் மீதான விவாதம் இன்று சட்டபேரவையில் தொடக்கம்..

share on:
Classic

தமிழக சட்டப்பேரவையில், 2019-2020-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.

தமிழக சட்டசபையில், 2019-20ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த 8ம் தேதி, நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர், இன்று காலை, 10 மணிக்கு, சட்டப்பேரவை கூடுகிறது. இன்று முதல், வரும் 13ம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசுவார்கள். எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர்கள் பதில் அளிப்பர். கூட்டத்தின் கடைசி நாளான, 14-ம் தேதி, துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான பன்னீர் செல்வம், விவாதத்திற்கு பதில் அளித்து உரையாற்றுவார். இந்தக் கூட்டத் தொடரில், ஜாக்டோ ஜியோ போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
 

News Counter: 
100
Loading...

Ramya