நவம்பர் 6-ம் தேதியை குறிவைக்கும் 6 படங்கள்

share on:
Classic

இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித், விஜய், சூர்யாவின் படங்கள் ரிலீசாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு தாமதமானதால் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சூர்யாவின் என்ஜிகே உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியிருக்கும் நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா, விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படங்களும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்துள்ள பில்லா பாண்டி படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், அட்டகத்தி தினேஷ் - அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படமும் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 6-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமீர் கான் - அமித்தாப் பச்சன் இணைந்து நடித்துள்ள தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படமும் தீபாவளி ரேசில் இணைந்துள்ளது. 

3000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்த தமிழ்நாட்டில் இப்போது 1000 திரையரங்குகள் கூட இல்லை. எனவே ஒன்றுக்கு மேற்பட்ட பெரிய படங்கள் வெளியானால் சிக்கல் ஏற்படுகிறது. ஆறு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக வாய்ப்பு இல்லை. எனவே திரையரங்குகள் கிடைக்காமல் சில படங்கள் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் எந்த படமும் இதுவரை பின்வாங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை
 

News Counter: 
100
Loading...

sankaravadivu