அதிமுக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்க தேமுதிக முடிவு..!

share on:
Classic

அதிமுக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்க தேமுதிக முடிவு செய்துள்ளதாகவும், கூட்டணி தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக, அதிமுக கட்சிகளுடன் ஒரே நேரத்தில் தேமுதிக நிர்வாகிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு நிறைவுற்றதால், சீட் இல்லை என்று திமுக கைவிரித்தது. அதே நேரத்தில் அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, அவைத்தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், அதிமுகவுடனான கூட்டணியை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில், அதிமுக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்க தேமுதிக முடிவு செய்துள்ளது.

News Counter: 
100
Loading...

sajeev