சென்னையின் பல பகுதிகளில் விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு..!

share on:
Classic

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கூட்டணிகட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விஜயகாந்த், தனது இல்லத்தில் ஓய்வு எடுத்துவந்தார். இந்நிலையில, முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலுக்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மத்தியசென்னை நாடாளுமன்ற தெகுதி பா.ம.க வேட்பாளர் சாம்பால், வடசென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அலகாபுரம் மோகன்ராஜ், பெரம்பூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ராஜேஷ் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். வில்லிவாக்கம் பேருந்து நிலையம், பெரவல்லூர், மாதாவரம் மூலக்கடை,வியாசர்பாடி, பழைய வண்ணாரப்பேட்டை, காசிமேடு, தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில வாகனத்தில் அமர்ந்தபடியே வாக்கு சேகரித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan