பிரசார களத்தில் விஜயகாந்த்..!

share on:
Classic

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சென்னை வில்லிவாக்கத்தில் வட சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்ஜை ஆதரித்து வாக்கு சேகரித்தார். 

உடல்நலமில்லாமல் இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் பிரசார வாகனத்தில் அமர்ந்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

முதலில் வட சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்ஜை ஆதரித்து சென்னை வில்லிவாக்கம், கொளத்தூர், திருவிகநகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அதே போல, கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் சாம் பால்-ஐ ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind