தேர்தல் ஆணையத்தில் அதிமுக, திமுக பரஸ்பர புகார் : உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சத்யபிரத சாகு உறுதி..

share on:
Classic

அதிமுக, திமுக-வினர் என இருதரப்பிலும் இருந்தும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பேருந்துகளில் வாக்காளர்களை அழைத்து வந்து திமுக-வினர் வாக்களிக்க வைப்பதாக அதிமுக-வினர் புகார் அளித்துள்ளனர். மேலும் சில வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க விடாமல் வாக்காளர்களை தனியார் இடத்தில் அடைத்து வைத்துள்ளதாகவும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது அதிமுக-வினர் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, திமுக, அதிமுக என இருதரப்பில் இருந்தும் புகார்கள் வந்துள்ளதாகவும், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் பல இடங்களில் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
 

News Counter: 
100
Loading...

Ramya