38 இடங்களில் வெற்றி பெற்ற திமுக தலைமை கூட்டணிக் கட்சிகள்..!

share on:
Classic

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

 1. நீலகிரி தனி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 54 சதவிகிதம் வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளார். 
 2. தஞ்சை தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் த.மா.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் 3 லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் வீழ்த்தி வெற்றியடைந்தார். 
 3. கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதிஷ்-ஐ தோற்கடித்து திமுக வேட்பாளர் கவுதம்சிகாமணி வெற்றி பெற்றார். 
 4. நாமக்கல் தொகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் 6,26,000 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் காளியப்பன் வீழ்த்தியுள்ளார்.
 5. திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். 
 6. பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.கே கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் பச்சமுத்து திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவபதியை விட 4 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார். 
 7. ஆரணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளார் விஷ்ணு பிரசாத் 54 சதவிகிதம் வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை 2லட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றார். 
 8. அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளார். 
 9. ஈரோடு தொகுதியில் 53 சதவிகிதம் வாக்குகள் பெற்ற மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி, அதிமுக வேட்பாளர் மணிமாறனை வீழ்த்தி வெற்றியடைந்தார். 
 10. திருச்சி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுகரசர் 4 லட்சத்து 59 ஆயிரத்து 286 வாக்கு வித்தியாசத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவனை வீழ்த்தி வெற்றிப்பெற்றார். 
 11. வடசென்னையில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 62 சதவிகிதம் வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை விட நான்கு லட்சத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றார். 
 12. திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் சுப்பராயன், அதிமுக வேட்பாளர் ஆனந்தனை வீழ்த்தி வெற்றி பெற்றார்
 13. மத்திய சென்னையில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதிமாறன் 57 சதவிகிதம் வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். 4 லட்சத்து 47 ஆயிரம் வாக்குகள் பெற்ற தயாநிதி மாற்றன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளார் சாம் பாலை வீழ்த்தினார். 
 14. சேலம் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆறு அட்சம் வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார். இதன்மூலம் சேலம் மக்களவை தொகுதியில் 39 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வெற்றிப்பெற்றுள்ளது. 
 15. விழுப்புரம் (தனி) தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார், பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்யாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
 16. தென்காசி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தனுஷ் குமார், புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமியை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.
 17. காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 6 லட்சத்து 84 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் மூன்று லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் தோல்வியடைந்தார். 
 18. தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி 3 லட்சத்து 47 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப்பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார். 
 19. கிருஷ்ணகிரி தொகுதியில் களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார், அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
 20. திருநெல்வேலி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஞானதிரவியம், அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை வீழ்த்தி வெற்றியடைந்தார். 
 21. கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை மூன்று லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றார். 
 22. பொள்ளாச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனை விட ஒரு லட்சத்து 73 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றியடைந்தார். 
 23. மதுரை மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
 24. சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மூவாயிரம் வாக்குகள் வித்யாசத்தி வெற்றியடைந்தார். இவருக்கும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகருக்கும் இடையே இழுபறி நீடித்த நிலையில் இறுதியாக திருமாவளவன் வெற்றி அறிவிக்கப்பட்டது. 
 25. ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி எதிர்த்து போட்டியிட்ட பாஜக நயினார் நகேந்திரனை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
 26. கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் நடராஜன் 5 லட்சத்து 67 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஒரு லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். 
 27. தென் சென்னை தொகுதியில் போட்டியிட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 5 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை 2 லட்சத்து 62 வாக்குகள் வித்யாசத்தில் வீழ்த்தி தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றிப்பெற்றார். 
 28. திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெயகுமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் டாக்டர்.வேணுகோபாலை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 
 29. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தன்னை எதிர்த்துபோட்டியிட்ட பாமக வேட்பாளர் வைத்திலிங்கத்தை வீழ்த்தி வெற்றி பெற்றார். 
 30. நாகை(தனி) மக்களவை தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் தன்னை எதிர்த்துபோட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தாழை ம.சரவணனை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்
 31. தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவிந்திரநாத் குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை 76 ஆறாயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வீழ்த்தி பெற்று வெற்றி பெற்றார்
 32. கடலூர் தொகுதியில் களமிறங்கிய திமுக வேட்பாளர் ரமேஷ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கோவிந்த சாமி வீழ்த்தி 50 சதவிகிதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
 33. கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி 63 சதவிகிதம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப்பெற்றார். 
 34. திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கிய பி.வேலுசாமி 64சதவிகிதம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.. 
 35. சிவகங்கை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் ஐந்து லட்சத்து 66 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தார். 
 36. மையிலாடுதுறையில் திமுக சார்பில் போட்டியிட்ட ராமலிங்கம் 5லட்சத்து 99 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். 
 37. தருமபுரி தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கிய செந்தில்குமார் 47 சதவிக்தம் வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றிப்பெற்றுள்ளார். 
 38. இதேபோல் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்க தாகூர் 4 லட்சத்து 76 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.
News Counter: 
100
Loading...

Ragavan