தண்ணீர் பஞ்சம் : திமுக போராட்டம் அறிவிப்பு

share on:
Classic

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் 22ம் தேதி திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் கவனக் குறைவாலும், உள்ளாட்சித் துறை அமைச்சரின் அக்கறையற்ற தன்மையாலும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிப்படும் அவலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, குடிநீர் பஞ்சமே தமிழகத்தில் இல்லையென பொய்யான பிரச்சாரத்தை செய்து வருவதாக குற்றம்சாட்டினார். 

எனவே, தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையிலும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் குடிநீர் தட்டுப்பாடுள்ள பகுதிகளில் வரும் 22ம் தேதி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind