தேசிய அளவில் மீண்டும் முக்கியத்துவம் பெற்ற திமுக..!

share on:
Classic

தமிழகத்தில் 37 இடங்களை மக்களவை தொகுதிகளை பைற்றியதன் மூலம், தேசிய அளவில் திமுக மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

17வது மக்களவை தேர்தலில் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியுள்ளது. கருணாநிதி - ஜெயலலிதா என இரு ஆளுமைகள் இல்லாமல், அதிமுகவும் திமுகவும் சந்தித்த முதல் தேர்தல் என்பதால், இருகட்சிகளின் மீது எதிர்பார்ப்பு எழுந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்தி மக்களை சந்தித்தார். அப்போது, அதிமுக அரசின் ஊழல்கள், நிர்வாக சீர்கேடுகள் குறித்தும் எடுதுரைத்தார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால், மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

இதன்விளைவு தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. மக்களவை தேர்தல் முடிவுகளில் தமிழகத்தில் 37 இடங்களை கைப்பற்றியது. முக்கியமாக மாநிலங்களை உறுப்பினராக மட்டுமே இருந்து கனிமொழி முதன்முறையாக மக்களவையில் இடம்பெறவுள்ளார். இதேபோல், திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன், விசிக தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், எழுத்தாளர் சு.வெங்கடேசன் ஆகியோரும் மக்களவைக்கு செல்லவுள்ளனர். கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கூட அக்கட்சிகளின் வேட்பாளர்கள் தோல்வியை தழுவியிருக்கும் நிலையில், தமிழகத்தில் திமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திமுகவின் குரல் மக்களவையில் ஓங்கி ஒலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியின் மூலம் தேசிய அரசியலில் திமுக மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan