"திமுக சென்னை மக்களுக்கு துரோகம் செய்கிறது"

share on:
Classic

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரக்கூடாது என ஸ்டாலின் கூறுவது சென்னை மக்களுக்கு செய்யும் துரோகம் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

கவிஞர் கண்ணதாசனின் 93-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, சென்னை தியாகராய நகரில் உள்ள கண்ணதாசன் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தண்ணீர் பிரச்னையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக போராட்டம் நடத்துவதாக குற்றச்சாட்டினார். மேலும், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரக்கூடாது என ஸ்டாலின் கூறுவது சென்னை மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் அவர் கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan