"விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்"

share on:
Classic

விளையாட்டு போட்டிகளில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

விளையாட்டு போட்டிகளில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என திமுக சட்டப்பேரவை கொறடா சக்கரபாணி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், பொதுத்துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாகவும் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், வருவாய் துறையுடன் கலந்தாலோசித்து விளையாட்டு மைதானங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்

News Counter: 
100
Loading...

Ragavan