நீட் தொடர்பாக 5வது முறையாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது திமுக 

share on:
Classic

நீட் விவகாரம் தொடர்பாக பேரவையில் 5-வது முறையாக திமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

சட்டப்பேரவை தொடங்கியதில் இருந்து நீட் குறித்து கேள்வி எழுப்பி வரும் திமுக இன்று ஐந்தாவது முறையாக சிறப்பு கவன ஈர்ப்பு தீமானம் கொண்டு வந்தது. நீட் தேர்வு குறித்து தமிழக அரசு அனுப்பிய இரண்டு மசோதாக்களை மத்திய அரசு திருப்பி அனுப்பி வைத்த நிலையில், மீண்டும் இரண்டு மசோதாக்களை அனுப்பி வைக்குமா என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சிவி சண்முகம், நீட் தொடர்பான மசோதா நிறுத்து வைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது, நிராகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கவில்லை எனவும், மசோதா திருப்பி அனுப்பியது குறித்து காரணம் கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதி இருப்பதாகவும் விளக்கம் அளித்தார். 

மேலும், நீட் விவகாரம் குறித்து 12 முறை மத்திய அரசிற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவி சண்முகம் குறிப்பிட்டார். அதன்பிறகு பேசிய முதலமைச்சர் பழனிசாமி, நீட் விவகாரம் குறித்து சிறப்பு கூட்டம் கூட்டி விவாதிக்க தயார் என தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

aravind