தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் - ஸ்டாலின்

share on:
Classic

மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. தனியாக தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளதாகவும், 4 நாட்களுக்குள் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடும், தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் 17ம் தேதி வெளியிடப்படும் என குறிப்பிட்டார். அதனுடன் 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்படும் என தெரிவித்தார். 

நீதி மன்றத்தைப் பொறுத்த வரையில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். தேர்தல் ஆணையம் 2 வார காலம் அவகாசம் கேட்டுள்ளதாகவும், மீதமுள்ள 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் நோக்கம் என  என கூறினார்.

 

News Counter: 
100
Loading...

sajeev