கடைமடை விவசாயிகளுக்கு நீர் சென்றடையாவிடில் போராட்டம் வெடிக்கும் - திமுக தலைவர் ஸ்டாலின்

share on:
Classic

கடைமடை பகுதிகளுக்கு பாசனத்திற்கான நீர் சென்று சேர  அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தி.மு.க சார்பில் விவசாயிகள் ஆதரவோடு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உடைந்த முக்கொம்பு அணையின் மதகுப் பணிகள் முதலமைச்சரின் ஆணைப்படி, ஒரே வாரத்தில் சீரமைக்கப்படவில்லை என்றும், நேரில் பார்வையிட்டபின்,  இன்றுவரை 40 சதவீதப் பணிகள் கூட நிறைவு பெறவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.

மேலும் அவர் முக்கொம்பு அணையின் பாதுகாப்பில் அ.தி.மு.க அரசு தேவையான நடவடிக்கை எடுக்காததே, காவிரி நீர் வீணாக கடலில் கலக்கக் காரணம் என்றும் குற்றம்சாட்டினார். அதேப்போன்று  கடைமடை பகுதிவரை பாசனத்திற்கான காவிரி நீர் சென்று சேர  அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தி.மு.க சார்பில் விவசாயிகள் ஆதரவோடு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

janani