முதலமைச்சர் பழனிசாமியிடம் சரமாரி கேள்வி கேட்ட மு.க.ஸ்டாலின்!!!

share on:
Classic

முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்

தமிழகத்தில் அந்நிய முதலீடு சரிந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியை குறிப்பிட்டு,  திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் பழனிசாமியிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், தமிழகத்தில் அந்நிய முதலீடு 21 சதவீதம் சரிவு என மத்திய அரசு செய்தி வெளியிட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இதற்குதானா அ.தி.மு.க அரசு, பல கோடி ரூபாய் வீண் செலவு செய்து இரு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது? என்றும், முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind