தென்காசியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு களம் காணும் திமுக : இதுவரை அதிகமுறை வென்றது யார்..?

share on:
Classic

தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக 28 ஆண்டுகளுக்கு பிறகு களம் காண்கிறது.

தென்காசி தனி தொகுதியில் சிட்டிங் எம்.பி யாக அதிமுகவை சேர்ந்த வசந்தி உள்ளார். 2014 தேர்தலில் அவர் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றார். புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர்.கே கிருஷ்ணசாமிக்கு 2-ம் இடம் கிடைத்தது. ஆனால் இம்முறை கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவர் அந்த தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறார். அதே நேரம் திமுக 28 ஆண்டுகளுக்கு பிறகு அத்தொகுதியில் களம் காண்கிறது. அக்கட்சி சார்பில் தனுஷ் குமார் போட்டியிடுகிறார். அங்கு அமமுக சார்பில் எஸ். பொன்னுதாயி களம் காண்கிறார். மேலும் மக்கள நலக்கூட்டணி சார்பில் கே. முனீஸ்வரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ்.எஸ். மதிவாணனும் களத்தில் உள்ளனர். 

தென்காசியை பொறுத்தவரை இதுவரை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 9 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும், தமிழ்மாநில காங்கிரஸ் 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1991-க்கு பிறகு திமுக இம்முறை அங்கு நேரடியாக களம் காண்கிறது. திமுக அங்கு தனது வெற்றியை பதிவு செய்யுமா..? அதிமுக கூட்டணி வேட்பாளரான கிருஷ்ணசாமியின் வாக்குகளை அமமுக பிரிக்குமா..? நாம் தமிழர் வேட்பாளர் எவ்வளவு வாக்குகள் பெறுவார்..? மக்கள் நீதி மய்யம் கட்சியின் வாக்குசதவீதம் என்னவாக இருக்கும்.. போன்ற கேள்விகளுக்கு வரும் மே 23 வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

News Counter: 
100
Loading...

Ramya