திமுக, திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிப் பட்டியல் வெளியானது..!!

share on:
Classic

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் திமுக மற்றும் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகளிளை பட்டியலை அவர் வெளியிட்டார்.

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதனைத் தொடர்ந்து, தொகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டன.

அதன்படி திமுக தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், தென்காசி, ஶ்ரீபெரம்பத்தூர், அரக்கோணம், வேலூர், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, பொள்ளாச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், தூத்துக்குடி, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதேபோல் திமுக கூட்டணியில் கன்னியாகுமரி, தேனி, விருதுநகர், திருச்சி, கரூர், கிருஷ்ணகிரி, ஆரணி, சிவகங்கை, திருவள்ளூர், புதுச்சேரி உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

இதேபோன்று ஈரோட்டில் மதிமுகவும், நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, கோவையில் போட்டியிடுகிறது.

அதேபோல் சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் விசிகவும், ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும், நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும், பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சியும் களம் காண்கிறது.

News Counter: 
100
Loading...

Ragavan