புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைப்பு..!

share on:
Classic

புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்திட திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைத்து, அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மொழியாம் செம்மொழிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கை பற்றி கல்வித்துறை வல்லுநர்களின் கருத்தினை அறிய திமுக விரும்புவதாக தெரிவித்துள்ளார். கல்வி கொள்கை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்திட திமுக சார்பில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதன்படி, பொன்முடி, தங்கம் தென்னரசு, ராமசாமி, ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, சி.வி.எம்.பி. எழிலரசன், ரவீந்திரநாத், பிரின்ஸ் கஜேந்திரபாபு, செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய ஆய்வுக்குழுவை நியமித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வுக் குழு 10 நாட்களுக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்த பிறகு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind